இந்தியா

வேளாண் மகளிர்களுக்கு செயல் விளக்க முகாம்  

Added : ஜன 13, 2020
Advertisement

திருபுவனை: மதகடிப்பட்டு உழவர் உதவியகம், ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண் மகளிர் மற்றும் உணவு பாதுகாப்பு குழுக்களுக்கான மலர் அமைத்தல் குறித்த செயல் விளக்கம் சிலுக்காரிப் பாளையத்தில் நடந்தது.மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்று, வேளாண் மகளிர் மற்றும் உணவு பாதுகாப்பு குழுகளுக்கான வேளாண் சா்ர்ந்த தொழில்கள் குறித்தும், துறை மூலம் அத்திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து பேசினார்.இதில், கொய்மலர் அமைத்தல், அதன் பல்வேறு வகைகள், மலர் அமைத்தலின் செயல்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிலுக்காரிப்பாளையம், பி.எஸ்.பாளையம் வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் பக்கிரி, ஏழுமலை, செயல்விளக்க உதவியாளர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X