பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடியில் திருச்சி, உடுமலையில் மின் கட்டமைப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : தென் மாநிலங்களில் முதல் முறையாக மத்திய அரசின் 'பவர் கிரிட்' நிறுவனம் திருச்சி மற்றும் உடுமலைப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையங்களில் 300 கோடி ரூபாயில் அதிக திறன் உடைய மின்னழுத்த கட்டமைப்பை அமைத்துள்ளது.

மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் பல்வேறு திறன்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு மின்சாரத்தின் உயரழுத்தம் குறைந்த பின் வினியோகம் செய்யப்படுகிறது. இரவு மற்றும் மழைக் காலங்களில் மின் தேவை குறையும் போது மின்னழுத்தம் அதிகரிப்பதை சீராக வைக்கவும்; மின் தேவை அதிகரிக்கும் போது மின்னழுத்தம் குறைவதை தடுக்கவும் துணை மின் நிலையங்களில் உள்ள மின்னழுத்த கட்டமைப்பு பயன்படுகிறது. இது அதிக இடப் பரப்பில் பல உபகரணங்களுடன் செயல்படுகிறது.

உதாரணமாக வீடுகளில் மின்னழுத்த பிரச்னையால் 'டிவி ஏசி' உள்ளிட்ட சாதனங்கள் பழுது ஏற்படாமல் இருக்க 'ஸ்டெபிலைசர்' பயன்படுத்துவது போல துணை மின் நிலையங்களில் மின்னழுத்த கட்டமைப்பு பயன்படுகிறது. தமிழக மின் வாரியத்தின் துணை மின் நிலையங்களில் தற்போது 100 'மெகா வோல்ட் ஆம்பியர் ரீஆக்டிவ்' திறனுக்கு கீழ் உள்ள மின்னழுத்தத்தை கட்டுப்படுத்தும் கட்டமைப்பு மட்டும் உள்ளது. மத்திய அரசின் 'பவர் கிரிட்' நிறுவனத்திற்கு தமிழகத்தில் 7,65,400 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்கள் உள்ளன.

இந்நிறுவனம் தென் மாநிலங்களில் முதல் முறையாக திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள 400 கி.வோ. துணை மின் நிலையங்களில் 'ஸ்டேட்காம்' என்ற அதிக திறனில் மின்னழுத்த கட்டமைப்பை அமைத்துள்ளது. இது 200 மெகா வோல்ட் ஆம்பியர் ரீஆக்டிவ் திறன் அளவு உடைய மின்னழுத்தத்தை கட்டுப்படுத்தும். மொத்தம் 300 கோடி ரூபாய் செலவில் நவீன வகையில் அமைக்கப்பட்டு உள்ள அந்த கட்டமைப்பால் துணை மின் நிலையங்களில் மின்னழுத்த பிரச்னைகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X