நஞ்சில்லா காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு கள பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நஞ்சில்லா காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு கள பயிற்சி

Added : ஜன 13, 2020

மதுரை:மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சின்னப்பட்டி விவசாயிகளுக்கு நஞ்சில்லா காய்கறி உற்பத்தி குறித்து கள பயிற்சி அளிக்கப்பட்டது.

திட்டத்தை துவக்கி வைத்து வேளாண் அறிவியல் நிலைய நீர் வள நில வள திட்ட விஞ்ஞானி கிருஷ்ணகுமார் பேசியதாவது: மதுரை வேளாண் பல்கலை சார்பில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் குறுவையில் பசுந்தாள் உரங்கள், திருந்திய நெல் சாகுபடி, பயறு வகை பயிர்கள் உற்பத்தி மற்றும் துல்லிய பண்ணை முறையில் காய்கறி உற்பத்தி உள்ளிட்டவை செயல்படுத்தப் படுகிறது.

அங்கக முறையில் காய்கறி உற்பத்தி, இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப் படுத்துவது அவசியம். நீடித்த நிலையான விவசாயம் மற்றும் இயற்கை முறையில் மண் வள பாதுகாப்பு பற்றிய தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் அளித்து வருகின்றனர். அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

வேளாண் அலுவலர் கிறிஸ்டோபர், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் ஆகியோர் அங்கக வேளாண்மை பற்றிய அனுபவத்தை விவசாயிகளிடம் பகிர்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X