இந்தியா

கூட்டுறவு வங்கியில் லோன் மேளா

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியின் 65ம் ஆண்டை முன்னிட்டு, முத்தியால் பேட்டை கிளையில் இலவச சட்ட ஆலோசனையுடன் லோன் மேளா நடந்தது.புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி 1955ம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு கூட்டறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா கட்டுப்பாட்டில் பல்வேறு வங்கி பணிகளை நகர வங்கி மேற்கொண்டு வருகிறது.வங்கியின் நடைமுறையில் உள்ள வீடு, கட்டடம் மீதான அடமான கடன், காலிமனை அடமான கடன், வாகன கடன், தனிநபர் ஜாமீன் கடன், நகைக் கடை மற்றும் புரபோஷனல் லோன் மிக விரைவாக குறைந்த வட்டியில் இலவச சட்ட ஆலோசனையுடன் சனிக்கிழமை தோறும், ஒவ்வொரு கிளையிலும் கடந்த 4ம் தேதி முதல் லோன் மேளா நடைபெற்று வருகிறது.முத்தியால்பேட்டை கிளை வங்கி வளாகத்தில் நடந்த லோன் மேளாவில், வங்கி மேலாண் இயக்குனர் முரளி தலைமை தாங்கினார். உதவி பொதுமேலாளர்கள் ஆல்பிராட் சந்தானராஜ், ஜோசப் சுரேஷ்குமார், மேலாளர் சிவநேசன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் சங்கர், உதவி மேலாளர்கள் மதி வாணன், சத்தியமூர்த்தி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X