இந்தியா

கோலப்போட்டி பரிசளிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

திருபுவனை: மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி மற்றும் புதுச்சேரி வித்யாபாரதி சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி சன்னியாசிக்குப்பம் இந்திரா நகரில் கோலப்போட்டி நடந்தது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பாரததேவி பள்ளி் நிர்வாக அலுவலர் இளமதியழகன் தலைமை தாங்கினார். திருபுவனை கலைமகள் ஆங்கில உயர்நிலைப் பள்ளி நிர்வாகி முருகையன், கொம்பாக்கம் நியூலேண்டு பள்ளி நிர்வாகி ரங்கநாதன், சஞ்சீவிநகர் பாவேந்தர் பள்ளி நிர்வாகி மணிபாலன் முன்னிலை வகித்தனர். சிறப்பாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துளசி, மூத்த வழக்கறிஞர் கருணாமூர்த்தி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், ஏழைகள் 150 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கி பேசினர்.வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித விரிவுரையாளர் திருமுருகன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் பொறுப்பாசிரியர் தேவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X