இந்தியா

சிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 சிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை;  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் இருந்து, சிங்கிரி குடி கோவிலுக்கு பாத யாத்திரை நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்களும், பஜனைக் குழுவினரும் பங்கேற்றனர்.

உலக நன்மை வேண்டி, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத ஞாயிற்றுக் கிழமையில் புதுச்சேரியில் இருந்து, சிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 24ம் ஆண்டு பாத யாத்திரை நேற்று காலை நடந்தது.புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்டது. திருக் கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனத்துடன் பாத யாத்திரை துவங்கியது. தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.பாத யாத்திரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினரும் கலந்து கொண்டனர். வாத்தியங்கள் முழங்க, திவ்யநாம பஜனைகளையும், பிருந்தாவன பஜனைகளையும் இசைத்தவாறு பாத யாத்திரை நடந்தது. கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் நடந்து சென்றனர்.முதலியார்பேட்டை, நைனார்மண்டபம், அரியாங்குப்பம், தவளக்குப் பம், அபிேஷகப்பாக்கம் வழியாக சிங்கிரி கோவிலை பாத யாத்திரை அடை் தது. சிங்கிரிகோவிலில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவத் தலைவர்கள் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X