இந்தியா

பேராசிரியரை தாக்கிய வாலிபர் கைது 

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி; கல்லுாரி பேராசிரியரை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதகடிப்பட்டை சேர்ந்தவர் விஜயக்குமார்,42; மூலகுளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் மாலை, ஆம்பூர் சாலையில் உள்ள தனது நண்பர் ஆனந்தகுமாரை பார்க்க பைக்கில் வந்ததார்.அப்போது சாலையில் குடிபோதையில் வந்த 20 வயது மதிக்கதக்க வாலிபர், திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து, விஜயக்குமாரை தாக்கினார். அதில் தலையில் படுகாயமடைந்த விஜயக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அதற்கிடையே, விஜயக் குமாரை கல்லால் தாக்கிய போதை வாலிபரை, அப்பகுதி மக்கள் பிடித்து, பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை யில் அவர், கர்ணன்,19; ஆம்பூர் சாலை பிளாட்பாரத்தில் தங்கியுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X