இந்தியா

ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரை வெல்லும் உற்சவம்

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: ரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரை வெல்லும் உற்சவம் நடந்தது.புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் ரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது.

இங்கு மார்கழி மகோற்சவம், கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.மார்கழி மகோற்சவத்தின் முக்கிய உற்சவமான கூடாரை வெல்லும் உற்சவம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமி முன்பாக பிரபந்த சேவை நடந்தது. திருப்பாவையில் இருந்து பாசுரங்கள் பாடப்பட்டது.மார்கழி மாத பஜனை ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வேட்டி, புடவை வழங்கப்பட்டது. வளையல் உள்ளிட்ட மங் கலப் பொருட்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சாற்றுமுறை தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை, ரங்க ராமானுஜர் பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன், தேவநாத ராமானுஜதாசர், பாலாஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X