இந்தியா

டிசம்பர் மாத சம்பளம் கிடைக்குமா? ஊர்க்காவல் படையினர் தவிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 டிசம்பர் மாத சம்பளம் கிடைக்குமா? ஊர்க்காவல் படையினர் தவிப்பு

புதுச்சேரியில் நிலவும் கடும் நிதி நெருக்கடியால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியாமல் முடங்கியுள்ளது.

பல அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளது. ஆனால், போலீஸ் துறைக்கு எந்தவித தடையின்றி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக போலீஸ் துறையில் பணியாற்றும் ஊர்காவல் படை வீரர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை.புதுச்சேரி போலீசில் 770 ஊர்காவல்படை வீரர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், 491 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போலீசாருக்கு இணையாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.ஊர்காவல்படை வீரர்களுக்கு தினசரி ரூ. 500 வீதம் இருந்த சம்பளம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம், காவலர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால், ஊர்காவல்படை வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.போலீஸ் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரை அனைவருக்கும் மாத முதல் தேதியில் சம்பளம் வழங்கப்படும். ஆனால், தற்போது ஜனவரி மாதத்தில் 12ம் தேதியை கடந்தும் இதுவரை ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.சம்பளம் வழங்காததால், பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க முடியாமலும், மாத செலவினங்களுக்கு தேவையான பணம் இன்றி ஊர்க்காவல்படை வீரர்கள், பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

போலீஸ் துறையில் கடைநிலையில் உள்ள ஊர்க்காவல் படையினர் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட அவர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கிட அரசும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X