இந்தியா

ஆல்பா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: ஆல்பா பொறியியல் கல்லுாரியில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில், ஆசிரியர் தின விழா நடந்தது.வேதபுரி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவரும், ஆல்பா கல்விக் குழும நிறுவனருமான பாஷிங்கம் வரவேற்றார். லயன்ஸ் சங்க மாவட்ட கவர்னர் கீதா கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளரான தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், 15 வயது மாணவி கீர்த்தி கானுகா எழுதிய 'டாக்கிங் டீன் டிரபிள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:ஆசிரியர்களை அழைத்து சிறப்பு செய்வது பாராட்டுக்குரியது. மொபைல்போன் வந்த பின்பு எழுதும் பழக்கம் குறைந்து விட்டது. நம் சமுதாயத்தில் படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைப்பதில்லை. தொழிலில் இறக்கி விடப்படுகின்றனர். மாணவர்களுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் என்றால் என்ன, எப்படி எழுதுவது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 7ம் வகுப்பு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கல்லுாரியில் படிக்கும்போது, அரசு பணியில் அமரும் வாய்ப்பு உருவாகும். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் குறைவாக உள்ளது. இது குறித்து விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் என பேசினார்.முன்னாள் மாவட்ட கவர்னர்கள் சரவணன், முதலாம் துணைமாவட்ட கவர்னர் முருகப்பன், இரண்டாம் துணை மாவட்ட கவர்னர் சுரேஷ் நீலகண்டன், லயன்ஸ் அகர்சந்த் ஆகியோர் சிறந்த ஆசிரியர்களை பாராட்டி விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X