இந்தியா

மர்டர் மணிகண்டன் மீண்டும் சிறையில் அடைப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: பரோல் விடுமுறை முடிந்து மர்டர் மணிகண்டன், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

வாணரப்பேட்டையைச் சேர்ந்தவர் மர்டர் மணிகண்டன். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவர், தனது தாயார் உடல்நிலை சரியில்லாததால், 30 நாள் பரோல் விடுமுறை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2ம் தேதி தனது வழக்கறிஞரை மட்டும் சந்திக்கலாம். வெளியாட்களை சந்திக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் 10 நாட்கள் பரோல் அளித்து உத்தரவிட்டது.அதன்பேரில் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், வாரணப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். பரோல் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால், நேற்று மாலை 5:00 மணிக்கு, காலாப்பட்டு மத்திய சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X