இந்தியா

சமத்துவ பொங்கல் விழா சஞ்சீவி நகரில் கொண்டாட்டம்

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க., சார்பில், காலாப்பட்டு தொகுதி சஞ்சீவி நகரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வடக்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். காலாப்பட்டு தொகுதி செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ருக்மாங்கதன், தொகுதி அவைத் தலைவர் காத்தவராயன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.விழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், புதிய பானையில் பொங்கல் வைத்து படையலிட்டனர். பொங்கல் பரிசாக பெண்களுக்கு சேலை மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டது.விழாவில் பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், தொகுதி செயலர்கள் ஸ்ரீதரன், சிவக்குமார், ராஜா, தங்கவேல் மாநில இளைஞரணி அமைப்பாளர் காந்தி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜவேலு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ராமலிங்கம், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X