இந்தியா

லாஸ்பேட்டையில் கோலத் திருவிழா

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நடந்த கோலத் திருவிழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று கோலமிட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில், நேற்று கோலத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. லாஸ்பேட்டையில் ஏர்போர்ட் சாலை, கல்லுாரி சாலை உள்ளிட்ட இடங்களில் நடந்த கோலத் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கோலமிட்டனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு, இயற்கை விவசாயம், ஆன்மீகம், பண்பாடு உள்ளிட்ட சமூக கருத்துக்களை வலியுறுத்தி கோலமிட்டு இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், கோலங்களை பார்வையிட்டு, வாழ்த்து தெரிவித்தார். கோலத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, பராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் கனகவள்ளி, பொதுச் செயலர்கள் விஜயா, வர்ஷா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X