இந்தியா

பெத்திசெமினார் முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1985ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார்.புதுச்சேரியில் இருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.கடந்த 85ம் ஆண்டில் பாடம் நடத்திய ஆசிரியர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். தங்களது ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.ஆசிரியர்களும், மாணவர்களும் மலரும் நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பள்ளி முதல்வரின் அழைப்பை ஏற்று, அடுத்தாண்டு நடக்க உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியின் 175வது ஆண்டு விழாவில் மீண்டும் சந்திப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X