பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அளவிலான திறன் போட்டி 23ல் துவக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை:மாவட்ட அளவிலான, திறன் போட்டி, 23ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு, இணைய தளத்தில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களுக்கு, சென்னையில், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, முதல் நிலை தேர்வு நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்படுவோர், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடக்கும், மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு தகுதி பெறுவர்.முதல் நிலை தேர்வுக்கு பங்கேற்போர், பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள, பள்ளி, கல்லுாரி சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் வர வேண்டும். அதேபோல், சீரான உடையில், போட்டிகள் நடக்கும் வளாகத்திற்கு காலை, 9:00 மணிக்கு ஆஜராக வேண்டும். மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வட சென்னை தொழிற் பயிற்சி நிலையம், சென்னை - 21 என்ற முகவரியை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X