இந்தியா

வரலாற்று பொக்கிஷமான ஆயி மண்டபம் புதுப்பிக்கப்படுமா

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்தள்ள, வரலாற்று பொக்கிஷமாக திகழும் ஆயி மண்டபம் சிதிலமடைந்துள்ள நிலையில், புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியின் வரலாற்று பொக்கிஷமாக 'ஆயி மண்டபம்' திகழ்கிறது. சட்டசபை எதிரில் பாரதி பூங்காவில் அமைந்துள்ள இந்த மண்டபம், ரோமானிய, கிரோக்க கட்டடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. 16ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆயி எனும் தாசி, குளம் வெட்டி புதுச்சேரியின் குடிநீர் பஞ்சத்தை தீர்த்தார். அவரது தொண்டின் நினைவை போற்றும் வகையில், அவருக்கு மண்டபம் அமைத்து, வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள், ஆயி மண்டபத்தை பார்க்க தவறுவதில்லை. அழகுற கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த மண்டபத்தை, இரவு நேரங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கும் நோக்கத்தில், சுற்றுலாத்துறையின் பாரம்பரிய கட்டடங்களை புணரமைக்கும் திட்டத்தில், மண்டபத்தை சுற்றிலும் வண்ண மிகு ஒளிர் விளக்குகள் அமைத்தனர். ஆனால், மண்டபத்தின் பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும், மண்டபத்தில் உள்ள ஆயி சிலை உடைந்தும் சிதிலமைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மண்டபம் படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளப்படும்.எனவே, நமது முன்னோர்களின் இயற்கையைப் போற்றும் உணர்வும், அதைக் காக்கும் அர்ப்பணிப்பும், அதற்காக அவர்கள் செய்த தியாகங்களின் அடையாளமாக அமைந்துள்ள ஆயி மண்டபத்தை, உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். . பிரெஞ்சு மற்றும் இந்தியாவின் தலைசிறந்த கட்டடப் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆயி மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X