இந்தியா

ஊசுடு ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

புதுச்சேரி: பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் நிகழ்ச்சி ஊசுடு ஏரியில் நடந்தது.பறவைகள் பற்றிய விழிப்புணர்வை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

'பறவைகளை பாதுகாக்க வேண்டும்; பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுக்களுக்கு தீர்வாக இருக்க வேண்டும்' என்ற 2020ம் ஆண்டுக்கான தலைப்பில், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நிகழ்ச்சியில் கருத்தாளர்கள், பறவை ஆர்வலர்கள், துறைசார் வல்லுனர்கள், அறிவியல் மன்ற மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பறவையியல் வல்லுனர் பூபேஷ் குப்தா, பறவைகள் தொடர்பான கையேடுகள், படங்கள், குறிப்புகள் மற்றும் ஓசைகள் மூலம் பறவைகளை அறியும் விதம் குறித்து விளக்கம் அளித்தார்.வனப் பறவைகள் கணக்கெடுப்பு, குறிப்பு எடுத்தல், பதிவு செய்தல், பட்டியல் தயாரித்தல் ஆகியவை குறித்து செந்தாமரை அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி விளக்கினார்.தொடர்ந்து, பைனாக்குலர் மூலமாக நீர் வாழ் பறவைகளை கண்டு களித்ததோடு, அவற்றை மாணவர்கள் கணக்கெடுத்தனர். மேலும், மாணவர்கள் தங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவைகளை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால், அதுதொடர்பான தகவல்களை எவ்வாறு பதிவு செய்வது, பறவைகளின் வேறுபாடுகளைக் கண்டறிவது உள்ளிட்ட தகவல்கள் குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் விளக்கி கூறினார்.நிகழ்ச்சியில் பறவைகளின் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பறவைகள் பற்றிய தொகுப்புகள், கையேடுகள், அட்டவணை, விளக்க அட்டைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கு, ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம், யூனிவர்சல் சுற்றுச்சூழல் கழகம், செந்தாமரை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் பல்வேறு அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X