பொது செய்தி

தமிழ்நாடு

கலவரத்தை துாண்ட முயற்சி பிராமணர் சங்கம் புகார்

Added : ஜன 13, 2020
Advertisement
 கலவரத்தை துாண்ட முயற்சி பிராமணர் சங்கம் புகார்

சென்னை:''குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, விஷம கருத்துக்களை கூறி, எதிர் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கின்றன,'' என, தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பிரமாண சங்கத்தினர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம் குறித்து, சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வாயிலாக, நம் நாட்டில் உள்ள, ஹிந்து, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.சட்ட திருத்தம் குறித்து, எதிர்கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து, விஷம கருத்துக்களை பரப்புகின்றனர். இதன் வாயிலாக, மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கின்றனர்.பிரதமர் மோடியின் மீது உள்ள வெறுப்பால், அவர் கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும், நன்மை, தீமைகளை அறியாமல் எதிர்க்கின்றனர்.மக்களின் நலனை கருத்தில் வைத்து, முதல்வர் இ.பி.எஸ்., சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்து உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X