சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.63 லட்சம் மதிப்பு தங்ககட்டிகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

Added : ஜன 13, 2020
Advertisement
 ரூ.63 லட்சம் மதிப்பு தங்ககட்டிகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

சென்னை:ரியாத் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் இருந்து, 'கல்ப் ஏர்' விமானம், நேற்று முன்தினம் அதிகாலை, 3:20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த கேரளாவைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான். 40, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அவர் கொண்டு வந்த இரு எமர்ஜென்சி விளக்குகளில் இருந்து, 24.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களில் ஒன்றான, துபாயில் இருந்து, ஏர் இந்தியா விமானம், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த, யாஸின், 46, மற்றும் புதுாரைச் சேர்ந்த, முகமது பனிஸ், 35, ஆகியோரை சோதனையிட்ட போது, இருவரது ஆசனவாயில் இருந்து, 38.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 944 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X