கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மகன் இறப்பு பெற்றோருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை:பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்ற இளைஞர், கீழே விழுந்து உயிரிழந்ததில், அவரது பெற்றோருக்கு, 19.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இருந்து, தடாவை நோக்கி, பாபு, 18, என்பவர், 2016 செப்டம்பரில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அக்கம்பேட்டை அருகே பைக் சென்றபோது, பாபு கீழே விழுந்து உயிரிழந்தார்.மகனின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, பாபுவின் பெற்றோர், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி எஸ்.உமா மகேஷ்வரி முன், இந்த வழக்கு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் மகனின் இறப்பிற்கு, பைக்கை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 19.50 லட்சம் ரூபாயை பைக் இன்சூரன்ஸ் நிறுவனமான, யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X