பொது செய்தி

தமிழ்நாடு

'போகி'க்கு நாளை விடுமுறை உண்டா?

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Pongal,school,leave,பொங்கல்,விடுமுறை,பள்ளி

சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், நாளை(ஜன.,14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும், நாளை மறுநாளில் இருந்து, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் உள்ளவர்கள், பண்டிகையை கொண்டாடும் வகையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பொங்கலுக்கு முன், நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், பழைய தேவையற்ற பொருட்களை, வீடுகளில் இருந்து அகற்றுவது வழக்கம். அதன்பின், பொங்கலை கொண்டாட பொதுமக்கள் தயாராவர். இதற்கு வசதியாகவும், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையிலும், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை பிரிவில், போகி நாளில் விடுமுறை விட வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, இன்று அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது .'மாணவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல, வரும், 14ம் தேதியும் விடுமுறை வழங்க, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
13-ஜன-202015:54:24 IST Report Abuse
Ray மஹாநவமிக்கு லீவுங்கோ REJOICE
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஜன-202015:09:00 IST Report Abuse
Natarajan Ramanathan எனது வயது 61. இன்றுவரை தலைக்கு குளிக்காமல் சாப்பிடும் பழக்கமே இல்லை. ஒரு முடிகூட நரைக்காமலும் வழுக்கை போன்ற பிரச்சினைகளோ கிடையாது. (ஹெல்மெட் அணியாமல் வண்டியை எடுப்பதே இல்லை)
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202017:50:26 IST Report Abuse
தமிழ்வேல் ஆச்சரியம்தான். ஆனால், இதை தெரிந்துகொண்டு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் ?...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202018:00:57 IST Report Abuse
தமிழ்வேல் இன்னொரு ஆச்சரியம்: 20 வயதிலேயே இந்திராகாந்தியின் அமைச்சரவையில் நீங்கள் பணி புரிந்தவர். //1980களில் நான் இந்திராவின் அமைச்சரவையின்கீழ் பணி செய்தவன் //...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
13-ஜன-202018:57:02 IST Report Abuse
Rajasஅரசு பேங்கில் வேலையில் இருந்தீர்கள் அல்லவா. வாழ்க்கையின் கஷ்டங்களே தெரிந்திருக்காது. அடுத்தவர்களின் கஷ்டங்களும் தெரிந்திருக்காது. தான் வெளியே சாப்பிட்டால் குடும்பத்திற்கு பணம் குறையும் என்பதற்க்காக டீயை மட்டுமே சாப்பாடாக எடுத்து கொள்பவன் முடி நரைத்து தான் போயிருக்கும். உங்களை குறை சொல்லவில்லை. ஆனால் நீங்கள் எழுதும் பல கருத்துக்கள் சாதாரண மனிதனின் நிலையை கேலி செய்வது போலவே இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
13-ஜன-202012:32:33 IST Report Abuse
sambantham sasikumar பொங்கல் திருவிழா தமிழர்களின் பெருவிழா. 15,16,17,ம் தேதி விடுமுறை சுமார் 4,மணி நேரம் செல்லவேண்டிய பேருந்து அன்று சுமார் 7,முதல் 8,மணிநேரம் ஆகும் ஆக 15,ம் தேதி பஸ்ஸ்டாண்ட்டிலும் பஸ்சிலும் கழிந்துவிடும். 16,ம் தேதி லீவு. 17,ம் தேதி திரும்பிவர ஒருநாள் சரியாக இருக்கும், ஆக பொங்கலுக்கு 1, நாள் மட்டுமே சொந்தஊரில் இருப்போம், இப்போது எல்லாம் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதே குறைத்துவிட்டது இது எல்லாம் கடந்த 20, ஆண்டுகளாக அனுபவித்து வரும் வேதனைகள் இன்னும் குழந்தைகளை அழைத்து செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். மேலும் 2, நாட்கள் விடுப்பு கொடுத்து வேறு சனிக்கிழமையை வேலைநாட்களாக வைத்துக்கொள்ளலாம். பொங்கல் கொண்டாட சிறப்பாக இருக்கும்
Rate this:
Share this comment
13-ஜன-202016:06:34 IST Report Abuse
Vittalanand RaoSontha oorileye eru. Unnai yaaru yinge kooppittu singara sennaiyai " aamade pomle vaavelee embele pesi sennaiththamizhai asingappaduthth sonnarkal ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X