பொது செய்தி

தமிழ்நாடு

மணிமேகலை பிரசுரத்தின் 43 நுால்கள் வெளியீடு

Added : ஜன 13, 2020
Advertisement
 மணிமேகலை பிரசுரத்தின் 43 நுால்கள் வெளியீடு

சென்னை:மணிமேகலை பிரசுரத்தின் சார்பில், நேற்று, 43 நுால்கள் வெளியிடப்பட்டன.சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும், 43வது புத்தகக் காட்சியின், திறந்தவெளி அரங்கில், மணிமேகலை பிரசுரத்தின் சார்பில், நேற்று, 43 நுால்கள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன் வரவேற்று பேசியதாவது: தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்; தானும் சமூகமும் நன்றாக இருக்க வேண்டும்; தான் நன்றாக இல்லாவிட்டாலும், சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என, மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு.அதில் மூன்றாம் வகையினர் தான் எழுத்தாளர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 43 நுால்களை வெளியிடுகிறோம். அதை வாசகர்கள் வாங்கி, பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தலைமையேற்று பேசியதாவது: வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில், புத்தகம் வாசிப்பது குறைந்து வருகிறது. புத்தகம் வாசித்தால் தான், குழந்தைகள், சுய சிந்தனையுடன் வளரும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். நான், பள்ளிப் பருவத்திலேயே, 'கல்கண்டு' வார இதழின் வாசகன். நல்ல புத்தகங்களை வாசிக்க, என் பெற்றோர் காரணமாக இருந்தனர். இப்போதுள்ள பெற்றோரும், பிள்ளைகளுக்கு புத்தகங்களை கொடுத்து, படிக்க ஊக்கப் படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நடிகை சொர்ணமால்யா பேசுகையில், ''நான் நடனத்தையும், புத்தக வாசிப்பையும், மூன்று வயதில் கற்றேன்.''வெளிநாட்டு பயணங்களிலும், என்னுடன் இருக்கும் மிக நெருங்கிய நண்பன் புத்தகம் தான். அந்த ஆர்வத்தில் தான், நடனத்தில் முனைவர் பட்டம் பெற்று, பலருக்கு ஆசிரியராக இருக்கிறேன். எழுத்துலகில் பெண்கள் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்,'' என்றார்.நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் வசந்த எஸ்.சாய், பாடலாசிரியர் விவேகா, குமுதம் குழும ஆசிரியர் ஜவகர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஒருங்கிணைத்தார்.இலங்கையைச் சேர்ந்த ஹாசிம் உமர், பாங்காக்கைச் சேர்ந்த ரபுயுத்தீன், இளம்பாரி கருணாகரன் உள்ளிட்டோர், 43 நுால்களையும் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X