பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு நுால்கள் விற்பனை விறுவிறு

Added : ஜன 13, 2020
Advertisement
 வெளிநாட்டு நுால்கள் விற்பனை விறுவிறு

மயூரா புக்ஸ், 'எப் 28' அரங்கில் உள்ளது. இங்கு, அமெரிக்கா,- கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெளிநாட்டு புத்தகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். புத்தக விற்பனையை அதிகரிக்க வேண்டும்என்பதற்காக, குறைந்த விலையில், 50, 100, 150 ரூபாய் என்ற விலையில், இந்த அரங்கில் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு, 600 ரூபாய் விலை உள்ள புத்தகங்கள், 100 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இந்த அரங்கில், கதை, வரலாறு, ஆங்கில இலக்கியம், குழந்தை இலக்கியம் உள்ளிட்ட, 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்துள்ளன.இது குறித்து, மயூரா புக்ஸ் உரிமையாளர் கலியப்பன் கூறுகையில், ''வெளிநாட்டு புத்தகங்கள் மட்டுமே இங்கு கிடைக்கும். குறைந்த விலையில் புத்தகம் கிடைப்பதால், தினமும், ஆயிரக்கணக்கான வாசகர்கள் குவிகின்றனர். 2,000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகின்றன,'' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X