சிறிய அளவில் வீட்டில் நுாலகம் அமைத்துள்ளோம். முன்பை விட, கண்காட்சியில் அதிக புத்தகங்களை பார்க்க முடிகிறது. வாசிப்பு தன்மையும் அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள், படைப்பாளிகளாக மாறி வருவது, ஆரோக்கியமான சமூகம் உருவாக வழி வகுக்கும்.-ஆர்.ராஜன், 65 வில்லிவாக்கம்
புத்தக வாசிப்பை அப்பாவிடம் கற்றுக்கொண்டேன். மூன்று ஆண்டுகளாக, கண்காட்சிக்கு வருகிறேன். கதை, நாவல், பொது அறிவு போன்ற புத்தகங்கள் வாங்கி உள்ளேன். ஞாபக சக்தி அதிகரிக்க வாசிப்பு தேவை. இங்குள்ள புத்தகங்கள், என்னுடைய பள்ளி படிப்புக்கு மிகவும் பயன் அளிக்கிறது.-ஆர்.ஆரவ், 10 வில்லிவாக்கம்.
வைரமுத்து, புதுமைப்பித்தன் மிகவும் பிடித்த நுாலாசிரியர்கள். இம்முறை புத்தக கண்காட்சியில், பொன்னியின்செல்வன் ஐந்து அதிகாரங்கள், வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர் உள்ளிட்ட நுால்களை வாங்கியுள்ளேன்.-ஜெ.பிரவின், 23ஐ,டி., ஊழியர், வேளச்சேரி
நாவல்கள், குழந்தை இலக்கியங்கள், குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை, தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகம் படிப்பேன். இம்முறை, 1,000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அப்துல் கலாம் எனக்கு பிடித்த தலைவர். அவரது நினைவாக, 'துல்கல்' என்ற பெயரில், இலவச நுாலகம் துவங்க உள்ளது. அதற்காக, 300 புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ளேன்.-எஸ்.அமிர்தா, 26தனியார் பள்ளி ஆசிரியர்,புரசைவாக்கம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE