சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நொளம்பூரில் தாயை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

Added : ஜன 13, 2020
Advertisement

நொளம்பூர்:தாயை குத்தி கொலை செய்த, மனநலம் பாதிக்கப்பட்ட மகனை, போலீசார் கைது செய்தனர்.
முகப்பேர் மேற்கு, இரண்டாவது பிளாக், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீராமலு, 70. இவரது மனைவி ஜெயலட்சுமி, 64. இவர்களுக்கு, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இதில், இரண்டு மகன்கள் மற்றும் மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதில், வீரராகவன், 35, என்ற மகன் மட்டும், திருமணமாகாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.இவருக்கு, 15 வயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர்களது வீட்டில் இருந்து, அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, ஜெயலட்சுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.ஸ்ரீராமலு உடலில் காயங்கள் இருந்தன. இவர்கள் அருகே, வீரராகவன் கத்தியுடன் வெறி பிடித்தது போல் நின்றிருந்தார். இதையடுத்து, நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயலட்சுமி உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரராகவனை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், நேற்று முன்தினம் வீரராகவன் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். 'நீ இப்படி நடந்து கொண்டால் உன்னை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து விடுவோம்' என, ஜெயலட்சுமி கூறி உள்ளார்.இதில், ஆத்திரமடைந்த வீரராகவன், சமையல் அறையில் இருந்த கத்தியால், தாயை சரமாரியாக குத்தியுள்ளார். தடுக்க சென்ற ஸ்ரீராமலுவிற்கும் காயங்கள் ஏற்பட்டன என தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X