போலீசுக்கு, தண்ணி காட்டிய குற்றவாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு, 'தண்ணி' காட்டிய குற்றவாளி கைது

Added : ஜன 13, 2020
 போலீசுக்கு, 'தண்ணி' காட்டிய குற்றவாளி கைது

எம்.கே.பி.நகர்:பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தலைமறைவு குற்றவாளியை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ரசூல்கான், 38; பிரபல ரவுடி. இவர் மீது, 2019ல், கொடுங்கையூர், அப்துல் கரீம் என்பவரை கடத்திய வழக்கு, போரூரில், 50 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, 2014ல், திருவல்லிக்கேணியில், 25 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கு என, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவரை போலீசார் தேடி வந்தனர். ஒன்றரை ஆண்டுகள், போலீசுக்கு, 'தண்ணி' காட்டி, தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, எம்.கே.பி.நகர் போலீசார், முல்லை நகர் மேம்பாலம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியே டூ - வீலரில் வந்த, தலைமறைவு குற்றவாளி ரசூல் கான், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்துள்ளார்.சுதாரித்த போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X