சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கிய மாணவர்களிடம் விசாரணை

Added : ஜன 13, 2020
Advertisement

திருமங்கலம்:பெரும்பாக்கம், நேசமணி நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், உமா மகேஷ்வரி, 55. இவரது மகன்கள், நாகராஜ், 35, நாகநாதன், 33, ஆகியோருடன், திருமங்கலத்தில் உள்ள தனியார் மாலில் படம் பார்க்க, நேற்று முன்தினம் இரவு சென்றார்.
திரையரங்கில், இவர்களுக்கு பின்னால், அமர்ந்திருந்தவர்களின் கால், இளைய மகன் நாகநாதன் மீது பட்டுள்ளது. இது குறித்து, நாகராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கும்பல், நாகராஜை சரமாரியாக தாக்கினர்.இதில், காயமடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார், தகராறில் ஈடுபட்ட கொளத்துாரைச் சேர்ந்த ஆதித்யா, 20, அயனாவரத்தை சேர்ந்த ஜெகதீஷ், 19, முகப்பேர் மேற்கைச் சேர்ந்த அருண் ஜோஷ்வா, 20, கொளத்துாரைச் சேர்ந்த சந்தோஷ், 20, உள்ளிட்ட கல்லுாரி மாணவர்களிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X