சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை

Added : ஜன 13, 2020
Advertisement

கூலி தொழிலாளி தற்கொலை
திருவான்மியூர்: திருவான்மியூர், காஸ்மோபாலிடன் காலனியைச் சேர்ந்தவர் மோகன், 39; கூலி தொழிலாளி. மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மோகன், தினமும் குடித்துவிட்டு வருவதால், தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடியை விட முடியாததால் மனமுடைந்த மோகன், நேற்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி துாக்கிட்டு மரணம்
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், கங்காதரன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50; மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள், பிரேம லதா, 18. இவர், கொரட்டூரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் சமையல் அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வில்லிவாக்கம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X