சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஜன 13, 2020
Share
Advertisement

ஆட்டோ டிரைவர் கைது

மதுரை: கே.புதுார் பாரதியார் மெயின்ரோடு ஆட்டோ டிரைவர் சோணைமுத்து 25. இவர் நேற்று முன்தினம் கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பிற்குள் ஆட்டோவை நிறுத்தினார். தட்டிக்கேட்ட போக்குவரத்து டைம் கீப்பர் முத்தையாவிடம் 57, தகராறில் ஈடுபட்டார். சோணைமுத்துவை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

மதுரை: பொன்மேனி காளியம்மன் கோயில் தெரு முகமது ராஜா மகன் முகமது இதியாஸ் 15. ஜன.,10 மாலை 6:00 மணிக்கு மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி
பலியானார். தீயணைப்பு மீட்பு குழுவினர் உடலை மீட்டனர். எஸ்.எஸ்.காலனி போலீசார்
விசாரிக்கின்றனர்.

லாரியில் தவறி விழுந்து கிளீனர் பலி

மதுரை: பசுமலை லாரி கிளீனர் நாகராஜ் 38. நேற்று முன்தினம் மாட்டுத்தாவணி நெல்
மார்க்கெட்டில் லாரியில் தார்பாயை கட்டி கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து பலியானார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளிக்க முயன்றவர் கைது

மதுரை: மேலுார் குறிச்சிபட்டியை சேர்ந்தவர் சங்கர் 43. இவருக்கும் முன்னாள் ஊராட்சி
தலைவர் சேதுராமனுக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கலெக்டர்
அலுவலகம் நுழைவு பகுதிக்குவந்த சங்கர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரைதல்லாகுளம் போலீஸ் எஸ்.ஐ., செல்வகுமார் கைது செய்தார்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மோசடி

மதுரை: மீனாம்பாள்புரம் சதீஷ் (எ) சுசிகரன் 38. இவரிடம் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி இந்திராநகர் மூன்றாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் ரூ.54 ஆயிரம் பெற்று மோசடி
செய்தார்.சதீஷ் புகார்படி தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

மதுரை: திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி ரோமன் மிஷனை சேர்ந்தவர் லயோலா ஜெரால்டு 32. நேற்று முன்தினம் மதுரை லேக் வியூ ரோட்டில் காரை நிறுத்தி சென்றார். மர்ம நபர் காரின் இடது புறம் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை திருடி
தப்பினார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீடு கட்டி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி

மதுரை: எஸ்.ஆலங்குளம் சங்கையா 45. அதே பகுதியை சேர்ந்தவர் கட்டுமான ஒப்பந்ததாரர் சோலைமணி 45. இவரிடம் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தை சங்கையா
வழங்கினார்.வீடு கட்டாமல், பணத்தையும் திருப்பி வழங்காமல் சோலைமணி மோசடி செய்தார். சங்கையா புகார்படி கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் கைது

மதுரை:மேற்கு ஊராட்சி 5வது வார்டு கோவில்பாப்பாகுடி அ.தி.மு.க., கவுன்சிலர் செல்லப்பாண்டி 45. இவர் நேற்று முன்தினம் 12வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமாரை மர்ம நபர்கள்கடத்தியதாகவும், அவரை கண்டுபிடித்த பின் தலைவர் தேர்தலை நடத்தக்கோரி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை
தல்லாகுளம் போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் கைதுசெய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X