பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு ஆண்டுகள் கடந்தாச்சு கொஞ்சம் பாராட்டினால் என்ன?

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, இரு ஆண்டுகளாக, பாராட்டு விழா நடத்தப்படவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகள், பாடவாரியாக முழு தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடத்துவது வழக்கம்.
பாராட்டு சான்றிதழ் வழங்குவதால், அடுத்தாண்டு முழு தேர்ச்சி வழங்க வேண்டுமென்ற உத்வேகம், போட்டி மனப்பான்மை ஏற்படும்.கனவு ஆசிரியர், நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்கள் பெற்ற சான்றிதழுக்கு, பிரத்யேக மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளாக, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், கவுரவிக்கப்படவில்லை.இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், முதன்மை கல்வி அலுவலரிடம் சமீபத்தில் மனு அளிக்கப்பட்டது.புதிய பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் இருப்பதால், மாணவர்கள் திணறும் நிலை உள்ளது. இதில், நுாறு சதவீத தேர்ச்சி வழங்குவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறமை சார்ந்தது. ஆண்டு முழுக்க தேர்ச்சியை நோக்கி ஓடும் ஆசிரியர்களை, சிறிது ஊக்குவித்தால் கற்பித்தல் திறன் இன்னும் மேம்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X