பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தரம் தகவல் பெறும் பணிகள் மும்முரம்

Added : ஜன 13, 2020
Advertisement
 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தரம் தகவல் பெறும் பணிகள் மும்முரம்

கோவை:பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள, தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட உள்ளதால், வரும் 13ம் தேதிக்குள் தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக, தொழிற்கல்வி மற்றும் கணினி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன.
இப்பாடப்பிரிவுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மாணவர் சேர்க்கை அதிகமிருந்தும், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் இருப்பதால், இப்பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கை, நிலுவையில் உள்ளது.தற்போது இப்பணியிடங்களை நிரந்தரமாக்க, அரசுக்கு கருத்துரு சமர்பிக்கப்படவுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சுகன்யா சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக, தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் பணியிட விபரங்களை, இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை விபரங்களுடன் இணைத்து, வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X