வாகை சூடியது செயின்ட் பிரான்சிஸ்: பள்ளிகளுக்கான கபடியில் அபார ஆட்டம்

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:மாநில அளவில், பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியில், கொடிவேரி, செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அணி, சாம்பியன் பட்டம் வென்றது.நேருநகர், சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், மாநில அளவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, சங்ககிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 60 அணிகள் பங்கேற்றன.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், அமிர்த வித்யாலயம் பள்ளி அணி, 27-22 என்ற புள்ளி கணக்கில், பல்லடம் அரசு பள்ளி அணியை வென்றது. மூன்றாமிடத்தை சேலம் அரசு பள்ளி அணி பெற்றது.மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், கொடிவேரி, செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அணி, 35-13 என்ற புள்ளி கணக்கில், சி.சி.எம்.ஏ., பள்ளி அணியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணசாமி, கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜூலு, டீன் ரம்யா ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X