பொது செய்தி

தமிழ்நாடு

மணவாள நகர் பள்ளியில் திறந்தவெளியில் விலையில்லா சைக்கிள்கள்

Added : ஜன 13, 2020
Advertisement
 மணவாள நகர் பள்ளியில் திறந்தவெளியில் விலையில்லா சைக்கிள்கள்

மணவாள நகர்:மணவாள நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்காக, விலையில்லா சைக்கிள் வழங்குவதற்காக, மணவாள நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 4,000 சைக்கிள்கள் தயார் செய்யும் பணி, சில தினங்களாக நடந்து வருகிறது.இதற்காக அரசு பள்ளி வளாகத்தில், சைக்கிள் உதிரி பாகங்கள் வரவழைக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் விலையில்லா சைக்கிள்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒரு நாளைக்கு, 80 சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு, இதுவரை, 700 சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த சைக்கிள்களை பாதுகாப்பான இடத்தில் வைக்காமல், பள்ளி வளாகத்தில் கழிப்பறை அருகே திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா சைக்கிள்கள் வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா சைக்கிள்களை, தார்பாய் போட்டு மூடி வைத்து பாதுகாக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X