மண்டல கால்பந்து போட்டி; சாஸ்வி பள்ளி சாம்பியன்

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த, மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் சாஸ்வி பள்ளி அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.தீரன் சின்னமலை விளையாட்டு மையம் அறக்கட்டளை, தவத்திரு. ராமானந்த அடிகளார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.சி.டி., கல்லுாரி இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி சரவணம்பட்டி, குமரகுரு கல்லுாரியில் நடந்தது.கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 32 பள்ளி அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதிப்போட்டியில், சாஸ்வி பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில், கோபால் நாயுடு பள்ளி அணியையும்; 2வது போட்டியில், திருப்பூர் ஏ.வி.பி., பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், சி.எம்.எஸ்., பள்ளி அணியையும் வென்றன.இறுதிப்போட்டியில், சாஸ்வி பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில், திருப்பூர் ஏ.வி.பி., அணியை வென்று, கோப்பையை தட்டி சென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஈரோடு கால்பந்து சங்க செயலாளர் கமல் ஆகியோர் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X