பொது செய்தி

தமிழ்நாடு

முற்று பெற்றது கரும்பு வளர்ச்சி

Added : ஜன 13, 2020
Advertisement

பள்ளிப்பட்டு:எல்லாரும் விரும்பும் கரும்புக்கு, பொங்கல் திருநாளில், அதிக வரவேற்பு நிலவும். ஆனால், பண்டிகை நெருங்கிய நிலையிலும், கொள்வார் இன்றி கரும்பு அதன் வளர்ச்சியை நிறைவு செய்து காத்திருப்பது, விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கரும்பு என்றாலே எல்லாருடைய மனதிலும் இனிப்பு நினைவுக்கு வந்து செல்லும். மேலும், அலங்காரத்திலும், மங்கல பொருளாக பயன்படுத்தப்படுகிறது.தமிழர்களின் பாரம்பரிய பயிரான கரும்பு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப் பட்டு சுற்றுப்பகுதியில், அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கரும்பு நிச்சயம் இடம் பெற்றுஇருக்கும். இதனால், பொங்கல் பண்டிகையின் போது கரும்பு அறுவடை களை கட்டுவது வழக்கம்.ஆனால், உள்ளூர் கரும்பு ரகங்களை பொதுமக்களை அதிகம் விரும்பாததால், கரும்பு வயல்களில் அறுவடை நடத்தப்படா மல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
முழு வளர்ச்சியை எட்டிய கரும்பு, இனியும் புதிய தோகையை விரிக்காது என்பதற்கு அடையாளமாக, கடைசி இதழாக, வெள்ளை நிற கதிர் போன்ற பூக்களை வெளிப்படுத்தி உள்ளது. இதுவே அதன் வளர்ச்சியின் உச்சம்.இனியும் அறுவடை செய்யாவிட்டால், கரும்பு தண்டு பகுதியில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அது பஞ்சு போன்ற தக்கையாக மாறிவிடும். இதனால், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X