மாநில அளவிலான கபடி போட்டி; சேலம் அணிக்கு 'கப்'

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:மாநில அளவில், சப்- ஜூனியர் மாணவர்களுக்கான கபடி போட்டியில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேலம் மாவட்ட அணி, முதலிடம் பிடித்தது.கற்பகம் நிகர்நிலை பல்கலை, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும், மாநில அளவில்'சப்- ஜூனியர்' மாணவர்களுக்கான கபடி போட்டி, பல்கலை வளாகத்தில் நடந்தது.கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை, வேலுார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 32 அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதிப்போட்டியில், சேலம் அணி, திருப்பூர் அணி, அணிகள் மோதின. ஆட்ட முடிவில், தலா இரு அணிகளும், 35 புள்ளிகள் பெற்று டிராவில் முடிந்தது.பின்னர், 'சூப்பர் ரைட்' முறையில், சேலம் அணி, 6-5 என்ற புள்ளி கணக்கில், திருப்பூர் அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், வேலுார் அணி, 52- 40 என்ற புள்ளி கணக்கில், சிவகங்கை அணியை வென்றது.இறுதிப்போட்டியில், சேலம் அணி, 52-33 என்ற புள்ளி கணக்கில், வேலுார் அணியை வென்று, கோப்பை தட்டி சென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கற்பகம் நிகர்நிலை பல்கலையின் டீன் பாலாஜி, கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X