பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பகுதியில் மேம்பால பணி துவக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement
 ரயில்வே பகுதியில் மேம்பால பணி துவக்கம்

கடம்பத்துார்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கடம்பத்துாரில் ரயில்வே பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கின.
திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இந்த ரயில் நிலைய கடவுப்பாதை வழியே, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பேரம்பாக்கம், மப்பேடு வழியாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாருக்கு சென்று வருகின்றன.இந்த கடவுப்பாதை பூட்டப்படும்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து பொதுமக்கள் வேண்டுகோள்படி, கடம்பத்துார் ரயில் நிலையத்தில், 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 துாண்களுடன், 700 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அலத்தில் மேம்பாலம் கட்டும் பணி, 2015ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி துவங்கியது.இதன்படி நெடுஞ்சாலை பகுதியில், 25 துாண்கள், ரயில்வே பகுதியில் நான்கு துாண்கள் என, மொத்தம், 29 துாண்களுடன் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இரு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.
இதில். தற்போது நெடுஞ்சாலை துறை பகுதியில், 25 துாண்கள் அமைக்கப்பட்டு, பாலப் பணிகள் நிறைவடைந்தன.ஆனால், ரயில்வே பகுதியில், நான்கு துாண்கள் அமைக்கும் பணிகள் மட்டும், ஓராண்டுக்கு முன் நிறைவடைந்தன.ஆனால், துாண்கள் மேல்பகுதியில் அமைக்க வேண்டிய இரும்பு பாலங்கள், அமைக்கும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுஇருந்தது.
இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, ரயில்வே பகுதியில் மேம்பாலம் அமைக்க, இரும்பு மேம்பாலங்கள் வந்துள்ளதால், நேற்று முதினம் முதல், மேம்பாலம் அமைக்கும் பணிகளை ரயில்வே துறையினர் துவக்கியுள்ளனர்.இது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை விரைவில் துவக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X