பொது செய்தி

தமிழ்நாடு

'சிற்றம் சிறுகாலே வந்து

Added : ஜன 13, 2020
Advertisement
 'சிற்றம் சிறுகாலே வந்து

சலிவன் வீதியில், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, வேணுகோபால சுவாமி கோவிலில், நாளை மார்கழி மாதத்தை யொட்டி, ஆண்டாள் நமக்கு அருளிய, திருப்பாவையின், 29ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.சலிவன் வீதி வேணுகோபால சுவாமி கோவில் மைசூர் மன்னர்கள் காலத்தில், தெப்பக்குளத்தோடு கட்டப்பட்ட பிரம்மாண்டமான திருக்கோவில், இக்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சங்கல்பம் செய்து வழிபாடு செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வயோதிகர்கள் வழிபட்டால் மோட்ஷம் கிடைக்கும்.மார்கழி மாதத்தை யொட்டி இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு, 'சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச்சேவித்து ' என்று துவங்கும் பாடலை பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்எம்பெருமானே இந்த அதிகாலை நேரத்தில் உன் திருமாளிகையில் வந்து உன் திருவடி தாமரைகளுக்கு பல்லாண்டு பாடி நாங்கள் வணங்குவதன் காரணத்தை கூறுகிறோம். பசுக்களை மேய்த்து அவை தரும் உணவு உண்டு வாழும் இடைக்குலத்தில் பிறந்த நீ எங்களாலான எல்லா கைங்கர்யங்களும் செய்ய அனுமதிக்க வேண்டும்.நாங்கள் உங்களிடம் பறை எனும் அருள் கேட்டும் கிடைக்கவில்லை. எந்த காலத்திலும் எங்கு பிறவி எடுத்தாலும், அந்தந்த அவதார காலத்தில் நாங்கள் மட்டுமே உனக்கு கைங்கர்யம் செய்யும் அருளை பெற வேண்டும். வேறு விதமான எண்ணங்கள் எங்கள் உள்ளத்தில் தோன்றினால் அவற்றை நெஞ்சிலிருந்து நீக்கி உய்விக்க வேண்டும் என்கின்றனர் இடைக்குல பெண்கள், என்பதே இப்பாடலின் பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X