பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளை விரட்ட உடனே வாங்க! வனத்துறை கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:வனத்துறை சார்பில் தொண்டு நிறுவனத்தினர், வன ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், கோவையில் நடந்தது.இதில் பங்கேற்ற வன ஆர்வலர்கள் சிலர், வனத்துறை ஊழியர்களுக்கு போதிய வாகன வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். 'யானை ஊருக்குள் வந்து விட்டது, உடனே வாருங்கள்' என்று கூறினால், 'வாகன வசதி இல்லை' என்று வன ஊழியர்கள் கூறுவதாக தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன், ''ஊழியர்களுக்கு வாகனம் பிரச்னை இல்லை.''அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து, வந்து சேருவதற்கு தாமதம் ஆகும். கோவையில் அனைத்து வனச்சரகத்திலும், யானையை விரட்டுவதற்கான வாகனம் உள்ளது. எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு உச்ச வரம்பு இருக்கிறது. அதை கடந்து போகும்போதுதான், பிரச்னை ஏற்படுகிறது,'' என்றார்.அவருக்குப் பின், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தேபாஷீஷ் ஜனா பேசியதாவது:வனத்துறைக்கு கூடுதல் வாகனங்கள் தேவை என்று, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில், புகார் தெரிவித்தவுடன் சம்பவ இடத்துக்கு வன ஊழியர்கள் வந்து சேரும் நேரத்தை, முடிந்தளவு குறைக்க, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.கோவை குற்றாலத்தில் சூழல் சுற்றுலா அனுமதி வழங்கப்படுகிறது. அதில் கிடைக்கும் வருவாயை, வாகன எரிபொருள் செலவுக்கு வனத்துறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.கோவை மாவட்டத்தில் சூழல் மேம்பாட்டுக்குழு, கிராம வனக்குழு ஆகியவற்றை கூட்டமைப்பாக மாற்றும் திட்டம் உள்ளது. அதன் மூலம் நிர்வாகமும் எளிதாகும். அதில் இருக்கும் பணத்தை தேவைப்படும் இடங்களுக்கு, செலவழிப்பதும் எளிதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X