மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பரங்குன்றம்:மாநில வாள்வீச்சு போட்டி, தேசிய கராத்தே போட்டி, மாவட்ட பளுதுாக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும், சிலம்பத்தில் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.


சிலம்பத்தில் உலக சாதனை



ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றும் போட்டியில் 65 பேர் தொடர்ந்து 30 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். அவர்களில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்கள் விக்ரம பாண்டியன், தாணு, சரவணன், உதயகுமார் இடம் பெற்றனர்.


தேசிய கராத்தே



கொடைக்கானலில் நடந்த தேசிய கராத்தே போட்டிகளில் இக்கல்லுாரி மாணவர்கள் தினேஷ்குமார் கட்டா, சண்டை பிரிவுகளில் தங்கம், கலைவாணன் சண்டைப்பிரிவில் வெள்ளி, கட்டாவில் வெண்கலம் வென்றனர். பெண்கள் பிரிவில் மாணவி அபிதா சண்டை பிரிவில் 45-50 எடையில் தங்கம், 50-55 கிலோ எடைப்பிரிவில் சுதாராணி தங்கம், ஜெயப்பிரபா வெள்ளி, 60-65 கிலோ எடைப்பிரிவில் ஜெயரத்தினம் வெள்ளி பதக்கம் வென்றனர்.


மாநில வாள்வீச்சு



அன்னை பாத்திமா கல்லுாரியில் நடந்த மாநில வாள்வீச்சுப் போட்டியில் இக்கல்லுாரி மாணவி ஷைனி ரூபினா ஜெமிமா வெள்ளி, அபிதா விஷ்ணுபிரியா, சுதாராணி வெண்கலம் வென்றனர்.


பளு துாக்கும் போட்டி

மதுரை சவுராஷ்டிரா உபற்பயிற்சி மையத்தில் நடந்த மாவட்ட பளுதுாக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இக்கல்லுாரி மாணவி ஜெயபிரபா, 76 கிலோ எடைப்பிரிவில் கஸ்துாரி வெள்ளி வென்றனர். மாணவர் அருண்ராஜ் 85 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். வெற்றிபெற்ற மாணவர்களை கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உதவி தலைவர் ஜெயராமன், முதல்வர் மனோகரன், இயக்குனர் அழகுசுந்தரம், உடற்கல்வி இயக்குனர் ராகவன், உதவி இயக்குனர் கோவிந்தம்மாள் பாராட்டினர்.


விளையாட்டு விழா

மதுரை காமராஜர் மழலையர் துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.ஓய்வு பெற்ற மின் பொறியாளர் சோலையப்பன் தேசிய கொடி ஏற்றினார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜெயக்கொடி ஒலிம்பிக்கொடி ஏற்றினார். தலைமையாசிரியை மாலதி தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X