பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதிப்பு மாணவர்கள் பேரணி

Added : ஜன 13, 2020
Advertisement
 சுற்றுச்சூழல் பாதிப்பு மாணவர்கள் பேரணி

திருத்தணி:திருத்தணியில் உள்ள தளபதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தின.
தளபதி பள்ளி மற்றும் கல்லுாரியின் தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளரான திருத்தணி இன்ஸ்பெக்டர் முருகன், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்ற பேரணியை துவக்கி வைத்தார். திருத்தணி பை - பாஸ் சாலையில் துவங்கி, சித்துார் சாலை, ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை உட்பட முக்கிய சாலை வழியாக, நகராட்சி அலுவலகம் வரை, பேரணி சென்றது.'சுற்றுச்சூழல் பாதுகாப்போம், டெங்குவை ஒழிப்போம், பிளாஸ்டிக் கவர்கள் தவிர்ப்போம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, எடுத்துச் சென்றனர்.தளபதி பள்ளி முதல்வர் விநாயகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X