பொது செய்தி

தமிழ்நாடு

நேரு கல்வி குழுமத்தில் சர்வதேச பள்ளி துவக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement
 நேரு கல்வி குழுமத்தில்  சர்வதேச பள்ளி துவக்கம்

கோவை:கோவை நேரு கல்வி குழுமத்தின் கீழ், புதிதாக நேரு சி.பி.எஸ்.இ., சர்வதேசபள்ளி துவக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா பேசியதாவது:வாழ்க்கை கல்வி முக்கியமானது. இக்கல்விக்கு 'சிலபஸ்' இல்லை. அனுபவங்களே சிறந்த ஆசிரியர்; அனுபவங்கள் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளும் ஒருவர், எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க முடியும்.தமிழகத்தில் பொறியியல் பட்டம் முடித்து வரும், 3 லட்சம் மாணவர்களில், 15 முதல், 20 சதவீத மாணவர்களே தொழில்திறன் கொண்டவர்களாக உள்ளனர். சவால் நிறைந்த இன்றைய உலகில், திறன் மேம்பாட்டுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுஅவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், கார்மல் கார்டன் பள்ளி முதல்வர் பால்ராஜ், நேரு கல்வி குழும தலைவர் கிருஷ்ணதாஸ், செயலர் கிருஷ்ணகுமார், நேரு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் அனிருதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X