தமிழ்நாடு

'உயர்ந்த சிந்தனைகளே வெற்றிக்கு வழி வகுக்கும்'

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 'உயர்ந்த சிந்தனைகளே வெற்றிக்கு வழி வகுக்கும்'

கோவை:கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின், 31வது பட்டமளிப்பு விழா, திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நேற்று நடந்தது.அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
இவ்விழாவில், 'லோக்பால்' தலைவர் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் பேசுகையில், ''பட்டம் பெற்று விட்டோம் என்று மனநிறைவு அடையாமல், மென்மேலும் கற்று அறிவை பெருக்கி, கலாம் கனவுகளை மெய்ப்பிக்க, முயற்சிக்க வேண்டும். உயர்ந்த சிந்தனைகளே வெற்றிக்கு வழிவகுக்கும்,'' என்றார்.விழாவில், 1,482 இளங்கலை, 532 முதுகலை, 56 எம்.பில்., 55 பி.எச்டி., மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் வழங்கப்பட்டது.அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சிசுந்தரம், பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கவுசல்யா, அறக்கட்டளை நிர்வாகிகள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X