பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

Added : ஜன 13, 2020
Advertisement
 அரசு கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

கோவை அரசு கலை, கல்லுாரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை மற்றும் கோவை மாவட்ட சுற்றுலா துறை சார்பில், போலுவப்பட்டி 'டர்னிங் பாயின்ட்' சாகச மைதானத்தில், பொங்கல் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சித்ரா தலைமை வகித்தார்.இதில், மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், எக்ஸ்பிரஸ் ஹாலிடே மேலாண் இயக்குனர் கணேஷ், டர்னிங் பாயின்ட் கேம்ப் இயக்குனர் மேகலா, கல்லுாரியின் சுற்றுலா துறை தலைவர் சரவணன், உதவி பேராசிரியர் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்மலா கல்லுாரியில்தேசிய கருத்தரங்குகோவை, நிர்மலா மகளிர் கல்லுாரியின் ஆங்கில துறை மற்றும் 'தின்கிங்' பதிப்பகம் சார்பில், பெண்கள் சார்ந்த கட்டுக்கதைகளையும், அடிமைத்தனத்தையும் நீக்கல் எனும், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை, கல்லுாரி முதல்வர் ஹெலன் மற்றும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் உஷாநாராயணன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.கல்லுாரி ஆங்கிலத்துறையின் உதவி பேராசிரியர் லிவியன் மரியா யெவெட் எழுதிய ஆங்கில புத்தகத்தை, சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.கல்லுாரி முதல்வர் ஹெலன் கல்லுாரி மாணவிகளுக்கு எழுதிய, ஆங்கில சிறுகதை தொகுப்பும் வெளியிடப்பட்டது. 350க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு புத்தாடைகோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, கல்லுாரி மாணவர்கள் புத்தாடைகளை வழங்கினர்.கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் ஆடை வடிவமைப்பு துறை மாணவர்கள், 100 குழந்தைகளுக்கு தாங்களே தைத்து உருவாக்கிய ஆடைகளை, 12 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் அசோகன், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மணிவண்ணன், கல்லுாரி முதல்வர் பேபி ஷகிலா, துறை தலைவர் ரின்சி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X