பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் பனி நடுக்கம் தாங்கலை

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:இந்தாண்டு கோவையில் குளிரும், பனிப்பொழிவும் சற்று அதிகமாக இருந்து வருகிறது.காலை 9:00 மணிக்கு மேல் கூட, குளிர்ச்சியான சீதோஷ்ணமே நிலவி வருகிறது. நகரப்பகுதிகளை காட்டிலும் மலை அடிவாரப்பகுதிகளில், குளிர், பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.கோவையில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 16.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது, சராசரி வெப்பநிலையை காட்டிலும், 2.4 டிகிரி செல்சியஸ் குறைவு. இந்தாண்டில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையும் இதுதான்.கடந்தாண்டு ஜனவரி மாதம், குறைந்தபட்ச வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதற்கு முன் 2012ல் 15.4 ஆகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.'கோவையில், இன்னும் சில வாரங்களுக்கு குளிர், பனிப்பொழிவு நீடிக்கும்' என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X