பொது செய்தி

தமிழ்நாடு

வாய் பிளந்து காத்திருக்கு... ஆழ்துளை கிணறு!

Added : ஜன 13, 2020
Advertisement

சாக்கடை கால்வாயை துார்வாரணும்சரவணம்பட்டி, சிவானந்தபுரம், விநாயகர் கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார்வாரி கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.- உமாமகேஸ்வரி, விநாயகர் கோவில் வீதி.

மின் கம்பத்தால் விபத்துசிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகில், கிருஷ்ணா கார்டனில், சாலையில் கிடத்தப்பட்டுள்ள, உடைந்த மின் கம்பம், பல மாதங்களாகியும் அகற்றப்படாமல் உள்ளது. விபத்து ஏற்படுகிறது.- சுப்ரமணியன், சிங்காநல்லுார்.

குப்பை அள்ளுவதில்லைபேரூர் ரோடு, செல்வபுரம், சிவாலயா மகால் அருகில், குவியும் குப்பை வாரம் ஒருமுறை மட்டுமே அள்ளப்படுகிறது.- தேவி, செல்வபுரம்.

சாலையை புதுப்பிக்கணும்உப்பிலிபாளையம், சி. எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் அருகில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது; இதை சீரமைக்க வேண்டும்.- சரஸ்வதி, உப்பிலிபாளையம்.

சாய்ந்த மின் கம்பத்தை சீர்படுத்தணும்சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, மசக்கவுண்டர் லே-அவுட், ஸ்ரீ மெடிக்கல்ஸ் முன் உள்ள, மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.- நடராஜன், சின்ன மேட்டுப்பாளையம்.

சிமென்ட் ரோடு சேதம்மாநகராட்சி, 58வது வார்டுக்கு உட்பட்ட, நீலிக்கோனாம்பாளையம், சின்ன தோட்டம் முதல் வீதியில், சிமென்ட் சாலை, சேதமடைந்துள்ளது. வானங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.- மனோஜ், நீலிக்கோணாம்பாளையம்.

ரோடு மோசம்அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம் போக்குவரத்து சிக்னல் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.- ராஜா, காந்திபார்க்.

சாக்கடை கால்வாயால் அச்சம்மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட, துடியலுார் - அப்பநாயக்கன்பாளையம் ரோடு, அர்ஜுனா நகரில், சாலையோரம் திறந்த நிலையில் உள்ள, சாக்கடை கால்வாயால், விபத்து அபாயம் உள்ளது.-ஷியாம், அப்பநாயக்கன்பாளையம்.

நடைபாதை ஆக்கிரமிப்புமக்கள் அவதிஒப்பணக்கார வீதி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- சந்திரசேகரன், பேரூர்.

தெருவிளக்கு எரிவதில்லைகணபதி பஸ் ஸ்டாண்ட் - மணியகாரம்பாளையம் ரோட்டில் உள்ள, தெருவிளக்குகளில் ஒருசில இடங்களில் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி, புதிய விளக்குகள் பொருத்த வேண்டும்.- கணேசன், கணபதி.

வெளிச்சமில்லைமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, செல்வபுரம், சரோஜினி நகர், ஐந்தாவது வீதியில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, தெருவிளக்கு எரிவதில்லை.- ரத்தினகுமார்,

சரோஜினி வீதி.

மூடாத குழியால் அவதிமாநகராட்சி, 98வது வார்டுக்கு உட்பட்ட, காந்தி நகர், எல்.ஐ.சி., காலனி பகுதிகளில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள், பணி முடிந்து நீண்ட நாட்களாகியும் இன்னும் மூடப்படாமல் உள்ளன.- கனகராஜ்,

காந்தி நகர்.

ஆபத்தான ஆழ்துளை கிணறுமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, சேரன்மாநகர், சக்தி கார்டன்ஸ் பேஸ் 3ல் உள்ள, மின் கம்பம் எண் 19க்கு அருகில், திறந்த நிலையில் உள்ள, ஆழ்துளை கிணறை மூடவேண்டும்.- ரவிசங்கர், அம்பாள் நகர்.

குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்உப்பிலிபாளையம், தனலட்சுமி நகரில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாகிறது.- பெரியய்யா,

தனலட்சுமி நகர்.

நாய் தொல்லையால் குழந்தைகள் அச்சம்சுந்தராபுரம், அஷ்டலட்சுமி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிரித்துள்ளது. இங்குள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.- தேவேந்திரன், இடையர்பாளையம்.

ரோடு மோசம்அத்திபாளையம் - பெரியநாயக்கன்பாளையம் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும்.- செந்தில்குமார், அத்திபாளையம்.

பொறுப்பில்லாத துப்புரவாளர்கள்தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்திநகரில், சாக்கடையில் இருந்து, அகற்றப்பட்ட கழிவு பொருட்கள் வீடுகள் முன், கொட்டப்பட்டுள்ளது.- பொன்ராஜ், காந்தி நகர்.

போக்குவரத்து நெரிசல் சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, உழவர் சந்தை அருகில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- மணி, மதுக்கரை.

ஆக்கிரமிப்பால் அவதிபாலக்காடு ரோடு, குனியமுத்துார் பஸ் ஸ்டாப் - ரைஸ் மில் ரோட்டில் சாலையோரம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.-செந்தில், குனியமுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X