பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் பலகையை சரியாக வைக்கணும்

Added : ஜன 13, 2020
Advertisement

பாலக்காடு ரோடு, குனியமுத்துார் அடுத்த, இடையர்பாளையம் பிரிவில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள, பெயர் பலகை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக இப்பகுதிக்கு வருவோர் குழப்பம் அடைக்கின்றனர். குறிப்பாக, இடையர்பாளையம் பிரிவில் வைக்க வேண்டிய, பெயர் பலகை, வசந்தம் நகர் அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகரில் இருந்து, வாடகை கார் அல்லது ஆட்டோவில் வரும்போது, டிரைவர்கள் வசந்தம் நகருக்குள் சென்று சிரமப்படுகின்றனர்.இதே போல், இடையர்பாளையம் பிரிவில், இடையர்பாளையம் சாலை என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. வசந்தம் நகர் அருகில் உள்ள பெயர் பலகையை, இடம் மாற்றி, இடையர்பாளையம் சாலை என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அருகிலும், இடையர்பாளையம் சாலை என்றுள்ள பெயர் பலகையை, ஊருக்குள் செல்லும் சாலையிலும் வைக்க வேண்டும்.- கோவிந்தராஜ், இடையர்பாளையம்.

சாதாரண கட்டண பஸ்கள் இயக்க வேண்டும்காந்திபுரம் -துடியலுார் - சரவணம்பட்டி மார்க்கத்தில் இயக்கப்படும், (வழித்தடம் எண்: 111, 111ஏ, 111பி) சொகுசு பஸ்களால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றுக்குப்பதில், சாதாரண கட்டண பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அரவிந்த், வெள்ளக்கிணர்.

கோவில் அருகில் இப்படியுமாகாளப்பட்டி, வெள்ளமேடு பகுதி, நால்ரோட்டில் இருந்து, மாரியம்மன் கோவில் செல்லும் வழியெங்கும் குப்பை குவிந்துள்ளது. குறிப்பாக, இங்குள்ள மாரியம்மன் கோவில் வீதிக்கு, துப்புரவு பணியாளர்கள் மாதம் ஒரே ஒரு முறை மட்டும் வந்து, மேலோட்டமாக குப்பை அள்ளிச் செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- கணேஷ், மாரியம்மன் கோவில் வீதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X