பொது செய்தி

தமிழ்நாடு

4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தது

Added : ஜன 13, 2020
Advertisement
 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தது

ஊத்துக்கோட்டை:கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு, சாய்கங்கை கால்வாய் வழியே, இதுவரை, 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக- - ஆந்திர மாநில அரசுகள் இடையே போடப்பட்டது தெலுங்கு கங்கை ஒப்பந்தம்.இதன்படி, கண்டலேறு அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். ஒப்பந்தப்படி, கடந்த, செப்.,25ம் தேதி, கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து, 152 கி.மீட்டர் சாய்கங்கை கால்வாயில் பயணித்து, 28ம் தேதி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.
இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,400 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.ஜீரோபாயின்டில், 447 கன அடி நீர் வருகிறது. இதுவரை, 4.38 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது.பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 426 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் செல்கிறது. அங்குள்ள இணைப்பு மற்றும் பேபி கால்வாய் மூலம், வினாடிக்கு, 382 கன அடி நீர், சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X