தமிழ்நாடு

கஞ்சா கோட்டை! ஆக மாறி விட்டது நமது கோவை:வேரோடு பிடுங்காமல் போலீஸ் வேடிக்கை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 கஞ்சா கோட்டை! ஆக மாறி விட்டது நமது கோவை:வேரோடு பிடுங்காமல் போலீஸ் வேடிக்கை

கோவை:கோவையில் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், சப்ளை செய்பவர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் நன்கு தெரிந்திருந்தும், அவர்கள் மீது பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேரோடு பிடுங்கி எறிய, போலீசாருக்கு மனமில்லாதது ஏன் என, பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், இன்ஜி., கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்லுாரிகள் அதிகளவில் உள்ளன. இக்கல்லுாரிகளில், பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இவர்கள் கல்லுாரி விடுதிகள் தவிர, தனியார் விடுதிகள், வீடுகளில், தங்கி கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். கண்காணிக்கவும் கேள்வி கேட்கவும் எவரும் இல்லாததால், இவர்கள் தடம் மாறுவது இயல்பாகி விட்டது. இவர்களை குறி வைத்து, நகரில் கஞ்சா விற்பனை சக்கைப்போடு போடுகிறது.எங்கிருந்து சப்ளை?கோவைக்கு ஆந்திரா, கேரளா தவிர, தமிழகத்தில் தேனி, கம்பம், ஈரோடு பகுதிகளில் இருந்தும், கஞ்சா கடத்தி வரப்படுகிறது.
கஞ்சா கடத்தி வருபவர்கள் வடவள்ளி, தொண்டாமுத்துார், பேரூர், ஆலாந்துரை, காருண்யா நகர், பீளமேடு, லாலி ரோடு, போத்தனூர், செல்வபுரம், துடியலூர், கணுவாய் பகுதிகளில் பதுக்கி வைத்து, சிறு வியாபாரிகள் மூலம், பொட்டலங்களாக பஸ் ஸ்டாண்ட், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் விற்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில், காந்திபுரம், குனியமுத்துார், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.கண் துடைப்பு கைதுகள்!அவ்வப்போது நடக்கும் இந்த கைதுகள் ஒவ்வொன்றும், கண் துடைப்பு நாடகமாகவே இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வழக்குக்கு கணக்கு காண்பிக்க, பெயரளவுக்கு சிறிது கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது.
இவர்களை விசாரித்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்களை அடையாளம் கண்டு, வேரோடு அழிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனால், கஞ்சா வியாபாரிகளின் கோட்டையாக, கோவை மாறி வருகிறது.கஞ்சா விற்பவர்கள் யார், எங்கிருந்து இவர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது, எங்கெங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும், போலீசாருக்கு நன்கு தெரியும்.ஆனாலும், நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் வியாபாரத்தை ஒடுக்க, ஏன் முன்வருவதில்லை என, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கஞ்சா விற்பனையை தடுக்க, இனியாவது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வப்போது நடக்கும் இந்த கைதுகள் ஒவ்வொன்றும், கண் துடைப்பு நாடகமாகவே இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வழக்குக்கு கணக்கு காண்பிக்க, பெயரளவுக்கு சிறிது கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது.
இவர்களை விசாரித்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்களை அடையாளம் கண்டு, வேரோடு அழிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. 'கடும் நடவடிக்கைஎடுக்கப்படுகிறது'மாநகர போலீஸ் சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில், ''கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், கஞ்சா வழக்குகள் குறைந்துள்ளன.
கஞ்சா விற்பனையை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது குறித்து, தகவல் அறிந்தவர்கள், 63842 00100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X