பொது செய்தி

தமிழ்நாடு

இந்த வாரம் ஆரவாரம்!

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 இந்த வாரம் ஆரவாரம்!

ஜன.,13: பிரம்ம சூத்திரம்உயிர்களுக்கும் பிரம்மத்துக்கும்இடையேயான தொடர்பை அறிய ஆத்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம் தேவை என்கிறார் ஆதிசங்கரர். ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், பிரம்ம சூத்திரம் குறித்து சொற்பொழிவு, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

ஜன.,16: திருவள்ளுவர் விழாவள்ளுவனை பெற்றதால், வையகத்திற்கே புகழ் என்கிறார் பாரதிதாசன். காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் நாள் விழா, காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. இதில், 'வான் புகழ் வள்ளுவனும் அண்ணல் மகாத்மாவும்' என்ற தலைப்பில் சிறப்புரையும், 'திருவள்ளுவரின் முப்பால் பெரிதும் வலியுறுத்துவது அறம் சார் அல்லது பொருள் சார் விழுமியங்கள்' என்ற தலைப்பில், பட்டிமன்றமும் நடக்கிறது.

ஜன., 19: பகவத்கீதைமுன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வளத்துக்கும் ஒரே வழி, சுயநலமின்மைதான் என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. சீரடி சாய்பாபா துவாரகமாயி கோவிலில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.

ஜன.,19: சத்ரு சம்ஹார திரிசதிசண்முக அர்ச்சனை குழுவின் சார்பில், செல்வ விநாயகர் கோவிலில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, சுப்ரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஜப ஹோமம் நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாசனம், காலை, 8:45 மணிக்கு, கலச ஸ்தாபனம், சுப்பிரமணிய சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. காலை, 11:45 மணிக்கு, தீபாராதனை மற்றும் பிரசாத வினியோகம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மகா அன்னதானமும் நடக்கிறது.

ஜன.,19: உணவு தயாரிப்பு பயிற்சிபேக்கரி வேண்டாம், வீட்டிலேயே விரும்பிய பிளேவர்களில் பிரட் செய்யலாம். கேக் மை டே சார்பில், பிரட் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிலரங்கு, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜன.,16: கோலப்போட்டிதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, கோலப்போட்டிகள் நடக்கின்றன. கலந்து கொள்ள விரும்புபவர்கள், 'வண்ணக் கோலம் போட்டு தமிழர் வீரம் காட்டு, தமிழர் வாழ்வியல் காட்டு அழகு கோலம் போட்டு' ஆகிய தலைப்புகளில், கோலமிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், மாலை, 4:30 மணிக்கு துவங்கும் போட்டிக்கு, அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X